செம்மரக்கடத்தலில் வழக்கில்; சங்கீதா சாட்டர்ஜீ கைது⛓

  |   செய்திகள்

✍துளிர் 🍁

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் விமான பணிப் 👩பெண் சங்கீதா சாட்டர்ஜி கைது⛓ செய்யப்பட்டுள்ளார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு சுமார் 9⃣ மாதங்களுக்குப் பிறகு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் கைது செய்யப்பட்டுள்ள லட்சுமணன் சிறையில் இருந்தாலும், அவரது 2⃣வது மனைவியும் விமான பணி பெண்னுமான சங்கீதா சட்டர்ஜி செம்மரம் கடத்தி வந்துள்ளார். சங்கீதா மீது சித்தூர், யாதமரி, குடிபாலா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். 2016 ஜனவரியில் சங்கீதாவை சித்தூர் 👮போலீசார் கொல்கத்தாவில் கைது⛓ செய்தனர். கைது செய்யப்பட்ட 1⃣ மணி நேரத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்தார். அதன் பிறகு 2016 மே 15 மற்றும் 30 ஆம் தேதி சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கீதா ஆஜார் ஆகாததால் சங்கீதாவிற்கு பிடிவாரண்டு பிரப்பிக்கப்பட்டது. பின் தப்பி சென்ற சங்கீதாவின் வங்கி கணக்கு ஜுன் 19 தேதி முடக்கப்பட்டதோடு ரூ 10 லட்சம் பணம், 2.5 கிலோ தங்க ஆபரணம், 1⃣ கிலோ வெள்ளி பொருட்கள் 1⃣ லேப்டாப்💻, 9⃣ செல்போன்📱, 60 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் புதியதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி பறிமுதல் செய்தனர். மேலும் லட்சுமணன் கைது செய்யப்பட்ட பிறகு சங்கீதாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ 90 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சங்கீதா சாட்டர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬