தீவிரம் ☄ அடைந்துள்ள தமிழக👨🌾விவசாயிகள் போராட்டம் 😳

  |   செய்திகள்

✍துளிர் 🍁

டெல்லியில், தமிழக👨🌾விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு, பல தரப்பினரும் தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

🔰 ஜல்லிக்கட்டு போன்று இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை தவிர்க்க மெரினா கடற்கரையிலும், கோவை வ.உ.சி. மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் குவிந்துள்ளனர். மேலும், போராட்டத்திற்காக இளைஞர்கள் கடலில்🌊 இறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது😱

🔰 திருச்சி உழவர்சந்தை அருகே 🛣சாலை மறியல் செய்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்✊. மறியலில் ஈடுப்பட்ட இளைஞர்களை 👮போலீசார் கைது செய்தனர். மேலும் பல இடங்களில் மாணவர்கள் கூடி போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதால் 👮போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

🔰 பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து✍ போராட்டமாக கையெழுத்து வாங்கப்பட்டது. 10,000 பேரிடம் கையெழுத்து✍ வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔰 ஏப்ரல் 3⃣ந் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில், திமுக, இந்திய கம்யூனிஸ்டு கடசிகள் ஆதரவு தெரிவிக்கின்றது.

🔰 தமிழக👨🌾விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், மதிமுக தலைவர் வைகோ அவர்களும் தமிழக விவசாயிகளை சந்திக்க கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்✍

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬