தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்🔬 அமைப்பது உறுதியா😱

  |   செய்திகள்

✍துளிர் 🍁

தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில், சுமார் ரூ.1,500 கோடி மதிப்பில் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம்🔬 அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இத்திட்டத்தில் 1,300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைத்து நியூட்ரினோ சோதனைகளை நடத்தப்படும் என அரசு தெரிவித்தது😱.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதியை ரத்து செய்யக் கோரியும் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பினர் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல்📜 செய்யப்பட்டது. 🗓மார்ச் 20-ம் தேதி நடந்த விசாரணையின் போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய தடையில்லா சான்றிதழை📃 ரத்து செய்யக்கோரி தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது😳.

இவ்விவகாரம் குறித்து மக்களவையில் 🇮🇳இந்திய அணுசக்தி துறை இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், திட்டமிட்டபடி தேனியில் ஆய்வு மையம்🔬 அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாததால் இத்திட்டம் தாமதமாகியுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னர் தொடங்கப்படும் எனவும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக✍ விளக்கம் அளித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬