இன்று முதல் காலவரையற்ற லாரி🚛 வேலை நிறுத்தம் 😱

  |   செய்திகள்

✍துளிர்🍁

🔹இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, 🔹ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, 🔹பெட்ரோல், டீசல்⛽ மீதான வாட் வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி🚛 வேலை நிறுத்தம் தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் நடைபெற்று வருகிறது.😳 6⃣ மாநிலங்களில் இருந்து 9⃣ லட்சம் லாரிகள் உள்பட மொத்தம் 18 லட்சம் வாகனங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன😱. மத்திய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை வேலைநிறுத்த போராட்டம்✊ தொடரும் என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா கூறியுள்ளார்😳. இந்த வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் கோடி💰 ரூபாய் இழப்பு ஏற்படும்😱. தென் மாநிலங்களில் 🚛லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினால் தினசரி 5 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு பரிவர்த்தனை பாதிக்கப்படும்😮.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬