டெல்லி ரெயில்🚋 கவிழ்ந்ததில் 38 பயணிகள் படுகாயம் 😳

  |   செய்திகள்

✍துளிர்🍁

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரிலிருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு, மகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரெயில்🚋 சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 2.07 மணிக்கு, உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா ரெயில் நிலையம் அருகே சென்ற போது திடீர் என்று ரெயில்🚋 கவிழ்ந்தது. ரெயிலின் 8⃣ பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தது😱. இந்த விபத்தில் 38 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து வந்து காயம்🤕 அடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு🏥 அனுப்பி வைத்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. 🚋ரெயில் பெட்டிகள் மீட்கப்பட்டு சேதம் அடைந்த தண்டவாளம் சரி செய்யப்பட்டு வருகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬