துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை வந்ததால் பரபரப்பு 😳

  |   செய்திகள்

✍துளிர்🍁

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை வந்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரபரப்பாக தங்களின் பிரச்சாரத்தை செய்து வரும் நிலையில் தேர்தல் ஆணையரின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது😳. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைக் கண்காணிக்க 3⃣ பார்வையாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் 2⃣ சிறப்புப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் கூடுதலாக நியமித்துள்ளது😕. ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா💰 செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள்📜 செய்யப்பட்டு வருகின்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில்🏨 நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா முயற்சிகளை தடுப்பது, வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உமேஷ் சின்ஹா இன்று மாலை 4⃣ மணிக்கு🕓 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, நாளை ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்று உமேஷ் சின்ஹா ஆய்வு நடத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬