மோகன்லாலுடன் பிரகாஷ்ராஜ்⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

கடந்த 2010ம் ஆண்டு 'அன்வர்' என்ற மலையாள படத்தில்🎥 ப்ரித்விராஜுடன் இணைந்து நடித்தார் பிரகாஷ்ராஜ்😯.அதன் பிறகு, 7⃣வருடங்கள் கழித்து தற்போது தான் மீண்டும் மலையாள படத்தில் ஜெயராமுடன் இணைந்து🎥'அச்சாயன்ஸ்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். எல்லா மொழி ஹீரோக்களுக்கும் வில்லனாக நடிக்கும் பிரகாஷ் ராஜ் தங்களது சூப்பர் ஸ்டார் ⭐மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மாட்டாரா⁉என்ற ஏக்கம் மலையாள ரசிகர்களுக்கு வெகு நாட்களாகவே இருந்தது😟.அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், மிக பெரிய பட்ஜெட்டில் தற்போது மோகன்லால் நடிக்கவிருக்கும்🎥'ஒடியோன்' என்ற படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகியுள்ளாராம்😍. விளம்பர படங்களை இயக்குவதில் அனுபவம் மிக்க 🎬ஸ்ரீகுமார் என்பவர் இப்படத்தை இயக்க போவதாகவும், மோகன்லால் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் இப்படத்தை 💸தயாரிக்கப்போவதாகவும் தகவல்💻வெளியாகி உள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬