⭐ரஜினியை சந்திக்கும் மலேசிய பிரதமர்⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

'கபாலி'🎥படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா✈சென்ற நமது தலைவரை அந்நாட்டு பிரதமர் மற்றும் ஆளுநர் 💐வரவேற்று விருந்தளித்தனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே..🙂தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால், மலேசிய நாட்டு✈பிரதமர் நஜீப் நஸாக் நாளை தொடங்கி, தொடர்ந்து 5⃣ நாட்கள் இந்தியாவில் அரசுமுறை✈சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்து உள்ளார்😯. இதனையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் என்று 2⃣நாட்கள் சென்னையில் இருக்கப்போகும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள போவதாக தெரிகிறது😳.மேலும், இவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதாகவும், அதனை அடுத்து✈டெல்லி செல்லும் அவர் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மற்ற தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளார்🎙.இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், நாளை சென்னை வரும் நஜீப் நஸாக் நமது ⭐தலைவரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளாராம்😳. ஒருவேளை அந்த மலேசிய தூதரக பதவியை பற்றி நமது தலைவரிடம் பேச போகிறாரோ⁉இருக்கலாம்🤔

📲 Get கோலிவுட் on Whatsapp 💬