அயோத்தியில் வழக்கில் அவசர விசாரணை நடத்த ⚖உச்ச நீதிமன்றம் மறுப்பு ✋

  |   செய்திகள்

✍துளிர்🍁

அயோத்தி ராமர்கோவில் பிரச்சனை தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ⚖உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது👁. அப்போது, மனுதாரரான சுப்பிரமணிய சாமி நீதிபதிகளின் முன் ஆஜரானார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய கோயில் இடம் தொடர்பான வழக்கில் நீங்கள் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லை என்று 👨‍⚖️நீதிபதி சுட்டிகாட்டினர். இதற்கு பதிலளித்த💬 சுப்பிரமணிய சாமி, இழுத்தடித்து கொண்டே போகும் இந்த வழக்கின் விசாரணையால் அங்கு வழிபாடு செய்யும் என்னுடைய அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளதால் இதுதொடர்பக நான் இங்கு மனு📜 செய்ய நேர்ந்தது என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த🔈 சுப்ரீம் கோர்ட் அமர்வு இவ்விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று மறுத்து விட்டது😲.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬