ஆர்.கே நகரில் 💰பணப்பட்டுவாடாவை தடுக்க 👦மாணவர்கள் - 👨இளைஞர்கள் குழு நியமனம்👏

  |   செய்திகள்

✍துளிர் 🍁

தலைமை தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா நேற்று சென்னை வந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று (01.04.2017) காலை அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் சோதனை செய்தார். பிறகு, நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது🔈, " ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி நேற்று அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் கட்சியினருடன் ஆலோசித்தேன். பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் தனியாக குழுக்கள் அமைத்துள்ளது என்.சி.சி. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட தேர்தல் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பணப்பட்டு வாடா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்😱. பொதுமக்களும் பணப்பட்டு வாடா பற்றி எங்களுக்கு தகவல் அளிக்கலாம். இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகரில் 5⃣ மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போலி வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதைத் தடுக்க முதன் முதலாக “பூத் சிலிப்” ஏ-4 சீட் அளவுக்கு பெரிய அளவில் வழங்கப்படும். அதில் வாக்காளர்களின் புகைப்படம் மிகவும் பெரிதாக இருக்கும். அவர் பற்றிய குறிப்புகளும் அதில் இடம் பெற்றிருக்கும். 50 வாக்கு சாவடிகள் பதற்றம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலுக்காக மத்திய துணை ராணுவம் விரைவில் வர உள்ளது. ஓ.பி.எஸ். அணியினர் பெற்றுள்ள இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்தை 🌱இரட்டை இலை சின்னம் போல தவறாக பயன் படுத்துவதாக புகார்கள் வந்துள்ளது. சட்ட வல்லுனர்களுடன்⚖ இதுபற்றி கலந்தாலோசித்து தேர்தல் ஆணையம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்." இவ்வாறு அவர் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬