இன்று வெளியாகிய🎥படங்களின் ஒரு பார்வை😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐⭐
கவண் :
கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள படம் 'கவண்'. இப்படத்தை ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார், டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஊடகங்களை மையமாக வைத்து இந்த படம் நகர்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் ரசிக்க தக்க வகையில் இருந்தாலும், சில இடங்களில் வெறுப்படைய செய்கிறது. படத்தின் பாடல்கள் அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்றாலும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் நடிப்பு அபாரம். மொத்தத்தில் 'கவண்' கவனிக்க வேண்டிய படம்👍.
படத்தின் ட்ரைலர் 📹https://goo.gl/lhGSLA
படத்தின் ஒளிபரபரப்பு நேரத்தை அறிய m5124என டைப் செய்யவும்❗

டோரா :
சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் 'டோரா'. ஹீரோ இல்லாத இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், தருண் சாஸ்த்ரியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். முற்றிலும் திகில் நிறைந்த இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டுளார்கள். ஒரு காரில் இருக்கும் பேய்.யை மையமாக வைத்தே முழு கதையும் அமைந்துள்ளது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் என்று கூறலாம்.படத்தில் வரும் காரின் பெயர் தான் 'டோரா'. மொத்தத்தில் 'டோரா'வை பார்க்காமல் இருக்க முடியாது👍
படத்தின் ட்ரைலர் 📹https://goo.gl/YxtkT0
படத்தின் ஒளிபரபரப்பு நேரத்தை அறிய m5052என டைப் செய்யவும்❗

அட்டு :
டிரீம் ஐகான் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரத்தன் லிங்கா இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் ரிஷி ரித்விக் – அர்ச்சனா கவி ஜோடி அறிமுகமாகியுள்ளது. போபோ ஷசி இப்படத்தை இசையமைத்துள்ளார். வட சென்னையில் நடந்த உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி தான் இந்தப்படம் அமைந்துள்ளது. படத்தின் இசை ரசிக்க தக்க வகையில் அமைந்துள்ளது. மொத்தத்தில் அட்டு, 'யதார்த்தம்'.
படத்தின் ட்ரைலர் 📹https://goo.gl/0ypbk2
படத்தின் ஒளிபரபரப்பு நேரத்தை அறிய m5448 என டைப் செய்யவும்❗

📲 Get கோலிவுட் on Whatsapp 💬