⚖உச்ச நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் 👨‍⚖️ஐகோர்ட் நீதிபதி கர்ணன் 😳

  |   செய்திகள்

✍துளிர்🍁

அவமதிப்பு வழக்கில், தமிழகத்தை சேர்ந்த 👨‍⚖️நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் 7⃣ நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று (31.03.2017) ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள்,👨‍⚖️நீதிபதி கர்ணன் நீதித்துறை மற்றும் நிர்வாக பணிகளுக்கு திரும்ப பிறப்பித்த தடை உத்தரவினை திரும்பப்பெறவில்லை😲. மேலும் 20 ஐகோர்ட் நீதிபதிகள் மீது புகார் செலுத்தியுள்ள கர்ணன் 4⃣ வாரங்களில் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கினை மே முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

சென்னை ஐகோர்ட் 👨‍⚖️நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட்டுக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டார்😐. அப்போது அவர் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு எதிரான புகார் மனுவை📃, உச்ச நீதிமன்ற⚖ தலைமை நீதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோருக்கு, அனுப்பினார். அதனை தொடர்ந்து, நீதிபதி கர்ணன் மீது, உச்ச நீதிமன்றம்⚖ தானாகவே கோர்ட் அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது😳. இது தொடர்பாக ஆஜராக இருமுறை உத்தரவிட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை😏. மேலும் அவர் மீது ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬