சென்னை ⚖உயர் நீதிமன்றத்தின் தலைமை 👩‍⚖️நீதிபதியாக 'இந்திரா பேனர்ஜீ' நியமனம் 😳

  |   செய்திகள்

✍துளிர்🍁

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 👩‍⚖️இந்திரா பேனர்ஜீ, மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்ட பின், மெட்ராஸ் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக ஹுல்வாடி G ரமேஷ் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது👍.

1985ல் கொல்கத்தாவில் அட்வகேட்டாக பணிபுரிந்த 👩‍⚖️பேனர்ஜீ(59), பிப்ரவரி 2002ல் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின், கடந்த ஆகஸ்ட் 2016 அன்று டெல்லி நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬