தெற்கு சூடானில் கடத்தப்பட்ட தமிழர்கள் விடுதலை 😌

  |   செய்திகள்

✍துளிர்🍁

தெற்கு சூடான் நாட்டில் கடத்தப்பட்ட மிதுன் கணேஷ் மற்றும் எட்வர்ட் அம்ப்ரோஸ் இன்று சென்னை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு சூடான் நாட்டில் உள்ள மேற்கு நைல் மாநிலத்தில், பொறியாளர்களாக வேலை செய்து வந்த மிதுன் கணேஷ், எட்வர்ட் அம்ப்ரோஸ் ஆகியோரை 🗓 மார்ச் 8⃣ம் தேதி அந்நாட்டு புரட்சிப் படையினர் கடத்திச் சென்றனர்😱. கடத்தப்பட்ட இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என பின்னர் தெரியவந்தது😱. மேலும், அங்கு வேலை செய்து வந்த பாகிஸ்தானியரான அயாஸ் ஹுசைன் ஜமாலி என்பவரும் 🗓 மார்ச் 19-ம் தேதி கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அனைவரும் எத்தியோப்பியா நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெற்கு சூடான் அரசுக்கு 🇮🇳இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், 🇵🇰 பாகிஸ்தான் அரசும் வேண்டுகோள் விடுத்திருந்தன. இதையடுத்து, எத்தியோப்பியா நாட்டு அரசின் உதவியுடன் கடத்தல்காரர்களுடன் தெற்கு சூடான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், கடத்தப்பட்ட 3⃣ பேரும் நேற்று விடுவிக்கப்பட்டதாக தெற்கு சூடான் அரசு அறிவித்துள்ளது. மிதுன் கணேஷ் மற்றும் எட்வர்ட் அம்ப்ரோஸ் இன்று சென்னை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬