புதுவையில் ஆளுநருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரி பணி மாற்றம்😱

  |   செய்திகள்

✍துளிர்🍁

புதுவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நேற்று(30.3.2017) சட்டசபை கூட்டம் தொடங்கியது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 🔈, " புதுவை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து எம்.எல். ஏ.க்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதிகாரிகளை எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தூண்டி விடுகிறார். அவரது தூண்டுதலால், எம்.எல்.ஏ. மீது நகராட்சி கமி‌ஷனர் 👮போலீசில் புகார் கொடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மதிக்காமலும், மக்கள் ஆட்சிக்கு உரிய மரியாதை கொடுக்காமலும் செயல்படும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள்😳. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், பாலன், அனந்தராமன் ஆகியோரும் கவர்னரை தாக்கி கடுமையாக பேசினார்கள்🗣. எம்.எல். ஏ.க்களுக்கு எதிராக செயல்படும் நகராட்சி கமி‌ஷனரை பணி நீக்கம்❌ செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இதையடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் 🔈, "உரிமை குழுவிடம் எம்.எல்.ஏ. புகார் கொடுத்து இருப்பதால் துணை சபாநாயகர் தலைமையிலான உரிமை குழு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும். அதுவரை நகராட்சி கமி‌ஷனரை காத்திருப்போர் பட்டியலில் வைக்குமாறு உத்தரவிடுகிறேன்" என்று கூறினார். மேலும் புதிய கமி‌ஷனராக கலை பண்பாட்டு துறை இயக்குனர் கணேசன் நியமனம் செய்யப்பட்டார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬