🏛கேரளா மற்றும் தமிழக அரசை எதிர்த்து 🌾👨 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்✊

  |   செய்திகள்

✍துளிர்🍁

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் கேரளா அரசை கண்டித்தும் அதை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் ஈரோடு மற்றும் கோவையில் விவசாயிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில்✊ ஈடுபட்டனர். இந்த தடுப்பணையால் கொங்கு மண்டலத்தில் 3⃣ லட்சம் ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகிவிடும் என்றும் மக்களின் குடிநீர்💧 பாதிக்கப்படும் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்👍. இந்நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம்⚖ தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும் அந்த தடையாணையை இதுவரை 🏛தமிழக அரசு பெறாததைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை அமைக்கக் கோரியும் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பவானி தடுப்பணை தடுப்புக் குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை😲 தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, தமாக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬