மகேஷ் பாபுவின்🎥பர்ஸ்ட் லுக் எப்போ⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

முருகதாஸ்🎬இயக்கத்தில் மகேஷ் பாபு முதன் முறையாக இணைந்து தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும்🎥ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் இரு மொழிக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று 🎬முருகதாஸ் முயன்று வருகிறார். அதனால் படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை😟. இந்நிலையில், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் இந்த படத்தின்🎥 டைட்டிலும் பர்ஸ்ட் லுக் .கும் எப்போது வெளியிட போகிறீர்கள்❓என்று ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்🙂.இதனால் சிறிது நேரத்திற்கு முன்பு, இது குறித்து தன் ரசிகர்களுக்கு மகேஷ் பாபு ஒரு அறிக்கையை விடுத்துள்ளார்🔈.'என் அன்பான ரசிகர்களே, எனது 23ம் படத்தை நீங்கள் அனைவரும் ஆர்வத்துடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்👍.எங்களது 🎥படக்குழுவினர் இந்த படத்திற்காக இரவும் பகலும் உழைத்து வருகிறார்கள்😳.எனவே விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட படும்👍.சற்று பொறுமையாக இருங்கள்💻'என்று கூறியுள்ளார். ஏப்ரல்14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுவார்களோ..🤔

📲 Get கோலிவுட் on Whatsapp 💬