தினகரன் கட்சியை விட்டு 🚫நீக்கப்படவில்லை😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

அதிமுக இரு அணியினரின் சமரசம் தற்போது பேச்சுவார்த்தையில் உள்ளது😯. இந்நிலையில், ஓபிஎஸ் அணியினர் தினகரன், சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்சியை விட்டு நீங்கினால் மட்டுமே சமரச பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வருவோம்😱 என்று கூறியதை அடுத்து, தினகரன் தாமாகவே 'விலகி கொள்கிறேன்' என்ற அறிக்கையை விடுத்தார்🔈.ஆனால் இதுகுறித்து நேற்று செய்தித்துறை அமைச்சர் ராஜு அளித்த பேட்டியில் கூறிய போது🎙,"இப்போதும், தினகரன் தான், கட்சியின் துணை பொதுச் செயலர்" என்று கூறினார். மேலும்,"தமிழகத்தில், 122 எம்.எல்.ஏ.,க்களுடன், அ.தி.மு.க.,வின் மெஜாரிட்டி ஆட்சி நடக்கிறது. 1989ல், கட்சி இரண்டாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் பறிபோனது. தற்போதும், அத்தகைய சூழல் நிலவுவதால், சின்னத்தை பெறுவதற்கும், கட்சியை இணைப்பதற்காகவுமே பேச்சு நடக்கிறது. தினகரன், கட்சியை விட்டு ஒதுங்கவில்லை. தற்போதும், அவர் தான், கட்சியின் துணை பொதுச் செயலராக நீடிக்கிறார்." என்று கூறியுள்ளார்.😱

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬