💦தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை🚫

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மே 1ம் தேதி முதல் தாமிரபரணி ஆற்றில் இருந்து 🍻கோக், பெப்சி உள்ளிட்ட 8 தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை🚫 விதித்து, நெல்லை கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்⚖. கடந்த வருடம் நவம்பர் 21ம் தேதி தாமிரபரணியில் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க கூடாது🚫என்று மதுரை 🏛உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், 2017ம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் அந்த நிறுவனங்கள் தண்ணீர் 🆗எடுக்கலாம் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில், தற்போது அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால்😳, பொதுமக்களின் 🚰குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வரும் மே 1 முதல் 🍻பெப்சி, கோக், உள்பட 8⃣ஆலைகள் ஆற்றில் இருந்து தண்ணீர் 🚫எடுக்கக்கூடாது என்று அதிரடி முடிவினை கலெக்டர் கருணாகரன் அறிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬