'முதல்வர் வரட்டும், போராட்டத்தை நிறுத்துகிறோம்'-🌱தமிழக விவசாயிகள்😠

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நிதி ஆயுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை ✈டெல்லி செல்லும் முதல்வர் 🌱விவசாயிகளை சந்திக்கவுள்ளார் என்று தகவல் தற்போது வெளியானது👍. இதனை அடுத்து முதல்வர் முன்னிலையில் தங்களது 40 நாட்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்று விவசாயிகள் தற்போது தெரிவித்துள்ளனர்😯. வறட்சி நிவாரணம், பயிர் கடன்களை ரத்து செய்வது முதலிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழக 🌱விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தும் 🏛மத்திய அரசு அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் விவசாயிகள் இன்று உச்சகட்டமாக சிறுநீர் குடிக்கும் போராட்டம் வரை நடத்தி விட்டார்கள்😱.இதனை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் விவசாயிகளை போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்🙏.இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது😯. அதில் கலந்து கொள்ள ✈டெல்லி செல்லும் 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்துக்கு முன்பாக விவசாயிகளை சந்திக்க உள்ளார். அப்போது அவர் முன்பு தங்களது 40 நாள்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 🌱விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்தில் 25ஆம்தேதி நடைபெறும் முழு கடை அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவும் தீர்மானித்துள்ளனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬