💸ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு செய்த கோகுலம் சிட் பண்ட்ஸ்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

வருமான வரித்துறையினர் கடந்த 4⃣நாட்களாக தொடர்ந்து கோகுலம் நிதி நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது😱. இந்நிலையில் இன்று இந்த சோதனை நிறைவடைந்துள்ளது😯. சென்னை கோடம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன😳. வரி ஏய்ப்பு புகார் எழுந்ததன் பேரில் சென்னை, கோவை, புதுச்சேரி மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவின் அந்நிறுவனத்துக்கு சொந்தமான 80 இடங்களில் வருமானவரித்துறை 👮அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்மூலம் இந்த நிறுவனம் மொத்தம் 💸ரூ.1100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதற்கான 📄ஆவணங்களும் சிக்கி உள்ளதாகவும் 💻தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிறுவனத்திற்கு ✈வெளி நாடுகளில் இருந்து நிறைய பணம் வந்துள்ளதை அடுத்து, ஹவாலா மோசடி நடந்து உள்ளதா❓என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.