வைகை ஆற்றின் 💦நீர் மட்டத்தை பாதுகாக்க தெர்மோகோல்😂

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌞வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ☔பருவ மழை சரியாக பெய்யாத காரணத்தினால், அனைத்து நீர்மட்டங்களில் உள்ள தண்ணீர் குறைந்த அளவில் உள்ளது. இந்நிலையில், நீர்த்தேக்கத்தில் உள்ள நீரும் சுட்டெரிக்கும் வெயிலில் நீராவியாக மாறி வருகிறது😳.இப்படி நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் நீராவியாக மாறுவதை தடுக்க, பொது பணித்துறையானது நேற்று வைகை ஆற்று நீர்த்தேக்கத்தில் ஓரு வித்யாசமான முயற்சியை நேற்று மேற்கொண்டது🤔. மாநில கூட்டுறவு அமைச்சர் செலூர் கே. ராஜா அவர்கள் நீராவியை தடுக்க நீரின் மேல்மட்டத்தில் தெர்மக்கோல்களை பறக்கவிட ஒரு புது யுக்த்தியை மேற்கொண்டார்🙂.இப்படி பறக்கவிடுவதால் தண்ணீரின் மேல்மட்டம் முழுவதும் தெர்மாகோல் மூடி கொள்வதன் மூலம் தண்ணீர் நீராவியாக மாறுவதை தடுக்கலாம் என்றும் கூறினார்🎙.மேலும், இந்த திட்டத்திற்காக 💸ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்🔈. ஆனால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது😟. அதிவேக காற்று வீசுவதால் தண்ணீரில் இவர்கள் மிதக்கவிட்ட தெர்மாகோல் பறந்து சென்றது, சில தெர்மகோல்கள் அணியின் கரையோரம் ஒதுங்கி நின்றது. இவருக்கு யார் இந்த அறிவுரையை வழங்கினார்கள் என்று தெரியவில்லை...😂வெளிநாடுகளில்✈ இவ்வாறு நீராவியை தடுக்க 🎱கருப்பு நிற பந்துகளை நீர்மட்டத்தை மேல் மிதக்கவிடுவார்கள்👍. இதனால் 🌞வெயிலின் தாக்கத்தை அந்த கருப்பு நிற பந்துகள் கிரகித்து கொள்வதோடு தண்ணீர் நீராவியாக மாறுவதையும் தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬