🌞வறண்டு போன தமிழகம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கடந்த வருடம் சரியான ☔பருவமழை இல்லாத காரணத்தினால் தற்போது தமிழ்நாட்டில் கடும் 💧தண்ணீர் பஞ்சம் வந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 அணைகளிலும் வெறும் 8.5 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது🔈.கிணறுகள், 2,518 குளங்களும் வறண்டதால் மே மாதம் இறுதி வரை குடிநீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது😱.இம்மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 11 அணைகளில் 💦தண்ணீரின் மொத்த கொள்ளளவு 13,765.5 மில்லியன் கனஅடியாகும்😱. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 5,140.44 மில்லியன் கனஅடி தண்ணீர் அணைகளில் இருந்தது😯.ஆனால் தற்போது 1,163.64 மில்லியன் கனஅடி 💦தண்ணீர் மட்டுமே உள்ளது.கடந்த ஆண்டு இதே காலத்தில் 11 அணைகளிலும் மொத்தம் 37.3 சதவீதம் நீர் இருப்பு இருந்தது😯.ஆனால், தற்போது 8.5 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது👍என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬