🌱விவசாயிகள் போராட்டத்தை கைவிட தலைவர்கள் வேண்டுகோள்🙏

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

டெல்லியில் தமிழக 🌱விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்😳.தமிழக விவசாயிகள் தொடர்ந்து 37 நாட்களாக தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். ஆனால் 🏛மத்திய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே...❗இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) திமுக தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 🌱விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு வரும் 25-ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்😳. மேலும், சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆகியோர் 🌱விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, இந்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டும் என்று வேண்டுகோள்🙏விடுத்துள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬