⭐விஷால் மீது திருட்டு பழியா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ்த் திரைப்பட கூட்டுறவு வீட்டு வசதி சங்க 📄ஆவணங்கள் திருடு போனது சம்பந்தமாக நடிகர் விஷால் மீது பாபு கணேஷ் என்பவர் 👮போலீசில் 📜புகார் கொடுத்துள்ளார். நடிகர் சங்கத்தின் சங்கத்தின் செயலாளராக இருந்த விஷால், அண்மையில் 💸தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவி ஏற்றது அனைவரும் அறிந்ததே...❗அவ்வாறு இருக்கையில், தற்போது சங்கத்தின் தலைவரான நடிகர் விஷால் மற்றும் 🎬கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், கதிரேசன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர் பிரபு உள்பட 11 தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் பாபுகணேஷ் என்பவர் சென்னை 👮போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று 📜புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பது என்னவென்றால்✍,"தமிழ்த் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஆவணங்களை 11 பேர் திருடியுள்ளனர். இதனால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உள்ளது😱.