25ம் தேதி திரையரங்குகளில் 🎥சினிமா காட்சிகள்🚫ரத்து😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌱விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து😯, அன்றையதினம் 🎥சினிமா காட்சிகள் ரத்து 🚫செய்யப்படும் என அறிவித்துள்ளது🔈. வங்கிக் 🏦கடன்களை 🚫ரத்து செய்ய வேண்டும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 🏛டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக 🌱விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வருகிற 25ம் தேதி (செவ்வாய்கிழமை) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது😳. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது👍. இதனை அடுத்து தற்போது இந்த போராட்டத்தில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் பங்கேற்கிறது👏.அதனால், தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் 🚫ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬