ஓடும் 🚌பஸ்சில் பணம் 💸பட்டுவாடா😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
ஆர்.கே.நகர் 🗳இடைத்தேர்தல் வரும் ஏப்ரல்.12ந் தேதி நடக்கவிருப்பதை அடுத்து அந்த பகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ.4000 ரூபாய்💸 பணம் பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள்😠 வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று தண்டையார்பேட்டை வழி தடத்தில் செல்லும் 44c எண் 🚌பஸ்சில் பணம் 💸பட்டுவாடா நடப்பதாக திமுக அணியினருக்கு தகவல் வர, அவர்கள் உடனே 🗳தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்கள்👍. இந்த புகாரின் பேரில் விசாரணை செய்தபோது, அந்த கண்டக்டரிடம் ரூ.2 லட்சம் ரூபாய் வரை பணம் இருந்தது தெரிய வந்தது😱. இதனை அடுத்து அந்த நடத்துனர் மற்றும் 🚌பேருந்தயும் வண்ணாரபேட்டை👮 காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள் இந்த சம்பவம் தொடர்பாக நடத்துனர் கோவிந்தராஜன் உள்ளிட்ட நான்கு பேரிடம் 👮போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬