ஜெயலலிதாவின் ரூ.113 கோடி💸சொத்துக்கள் யாரை சேரும்⁉

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
வருமானத்திற்கு அதிகமாக 💸சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் ⛓சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்👍. இதில் இன்னொரு குற்றவாளியான ஜெயலலிதா ⚰மறைந்து விட்டதால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து விட்டது 🏛நீதிமன்றம். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் அபராதமும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாரை சேரும்❓என்ற கேள்வி எழுந்துள்ளது.பெங்களூரை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவர் இதுகுறித்து கூறியதாவது: ஜெயலலிதா சொத்து குறித்து எந்த உயிலும் ✍எழுதி வைக்காத நிலையில் அவருடைய வாரிசுகளுக்கு அந்த சொத்து போய் சேர வேண்டும்😯. ஆனால் அவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை😟 என்பதால் அவருடைய அண்ணன் 👩மகள் தீபா மற்றும் 👨மகன் தீபக் இந்த சொத்திற்கு உரிமையானவர்கள் என்று கூறலாம்👍.மேலும், தமிழக அரசு போயஸ் கார்டன் 🏠வீட்டை அம்மாவின் நினைவில்லமாக மாற்ற முடிவு செய்தால் கூட தீபா மற்றும் தீபக் அதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்😯 அல்லது அந்த சொத்துக்குரிய 💸பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த சொத்தை எடுத்துக் கொள்ள முடியும்😳. அதே போல் கர்நாடக அரசால் பறிமுதல் செய்ய பட்ட பொருட்களையும் கேட்டு வாங்க தமிழக அரசு மற்றும் தீபா, தீபா அவரக்ளுக்கு உரிமை உண்டு, என்று கூறினார். மேலும், ஜெயலலிதா பெயரில் மொத்தம் 💸ரூ.113 கோடியே 72 லட்சம் உள்ளது. இதில் அசையும் சொத்துக்கள் ரூ. 41கோடியே 64 லட்சம், அசையா சொத்துக்கள் ரூ. 72 கோடியே 9 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬