✈விமான அதிகாரியிடம் 🙏மன்னிப்பு கேட்க மாட்டேன்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சிவசேனாவை சேர்ந்த எம்.பி. ரவீந்திர கெய்க் வாட், இவர் ✈ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரை 👡செருப்பால் அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அனைத்து ✈விமான நிறுவனங்களும் இவர் விமானத்தில் பயணம் செய்ய முடியாது🚫 என்று தடை விதித்தது. இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் இந்த பேச்சை எடுத்த சிவசேனா எம்பிக்கள் மத்திய ✈விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜுவை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர்😳. இதனால் கூட்டத்தை சற்று நேரம் ஒதுக்கி வைத்தார்கள்👍. இதன்பின் தொடர்ந்த கூட்டத்தில் பேசிய🎙 விமான போக்குவரத்து துறை மந்திரி, ✈விமானத்தில் செல்லும் போது எம்பி.யாகவே இருந்தாலும் அவர்கள் வெறும் பயணி தான், எனவே இந்த விஷயத்தில் சமரசம் செய்ய இயலாது😳 என்றார். இதனை தொடர்ந்து பேசிய 🎙ரவீந்திர கெய்க்வாட் தனது செயல் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக மக்களவையில் 🙏மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார். ஆனால், ✈விமான நிறுவன அதிகாரியிடம் 🙏மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தெளிவாக கூறி விட்டார்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬