30நாட்களாக தொடரும் நெடுவாசல் போராட்டம்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, நெடுவாசல் மக்கள் 2-ம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி துவக்கினர்😳. நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் கிராமமக்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு போராடி வருகின்றனர்😳. 30 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில், நேற்று முன் தினம், நாடியம்மன் கோயில் திடலில் அப்பகுதி பெண்கள் மண்தரையில் வாழை இலையில் மண்ணை கொட்டி உண்ணும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்😯. இதனை அடுத்து அங்குள்ள மக்கள் கூறுகையில்🎙, ‘2வது கட்டப் போராட்டம் ஒரு மாதமாக நடக்கிறது. இதுவரை மத்திய, மாநில அரசுகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் உள்ளன. பேச்சுவார்த்தைக்குக் கூட மக்கள் பிரதிநிதிகள் உரிய முயற்சி மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை’ என்று தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர்😟.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬