🏛தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டத்திற்கு வந்த வெங்கையா நாயுடு

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, தமிழக 💺முதல்வர் பழனிச்சாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 📜மனுவை கொடுத்தார். இதனை அடுத்து, மத்திய திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் நிருபர்களுக்கு வெங்கையா நாயுடு 🎙பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்🎙, 'தமிழகத்தில் 3 திட்டங்களை நிறைவேற்ற ரூ.1083 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அனுதியை இன்று வழங்கியுள்ளோம்'. அதில்,
🔰பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.663.93 கோடி
🔰தீன்தயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்துக்கு ரூ.59.14 கோடி
🔰 அம்ருத் திட்டத்துக்காக ரூ.360.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
என்று அறிவித்தார்🔈. இதனை அடுத்து, அவர் இங்கு வந்ததற்கான நோக்கம் என்னவென்று விளக்கம் ஒன்றினை அளித்தார்😯. அது பற்றி அவர் கூறுகையில்🎙, "நான் இங்கு வந்ததற்கு காரணம் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும், மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யவும் தான். மேலும், தமிழகத்துக்கு 3 திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அனுமதிக்கான உத்தரவை வழங்கவும் வந்தேன். இதுதவிர நான் அரசியல் செய்ய வரவில்லை. குடியரசு தேர்தலுக்காகவும் வரவில்லை. குடியரசு தேர்தலில் வாக்களிப்பது அவர்கள் விருப்பம்". என்று கூறினார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬