🇮🇳இந்தியாவில் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை👏

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🇮🇳இந்தியாவின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை புனேவிலுள்ள கேலக்ஸி கேர் 🏥மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது👍. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை 12 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவினால் நடத்தப்பட்டது😳. 26 வயதாகும் ஒரு 👩பெண்மணிக்கு பிறப்பில் இருந்தே கருப்பை இல்லாமல் இருந்துள்ளது😱. எனவே, தனது தாயாரின் கருப்பை இந்த பெண்ணிற்கு பொருத்தப்பட்டு உள்ளது👍. இது குறித்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான சஞ்சீவ் ஜாதவ் கூறும்போது🎙,"நாங்கள் இந்த அறுவை சிகிச்சை 8⃣நேரம் நடைபெறும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் இது 12 மணி நேரத்திற்கு நீடித்தது. தானம் வழங்கியவர் நலமாக இருக்கிறார். கருப்பை தானம் பெற்ற பெண் 24 மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்"என்றார். இந்த அறுவை சிகிச்சை இதுவரை ✈சவுதி அரேபியா, அமெரிக்கா, துருக்கி, ஸ்விடன் ஆகிய நாடுகளில் மட்டுமே நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬