அனைத்து அரசு 🏥மருத்துவமனைகளிலும் 'பயோ மெட்ரிக்' முறை👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

குழந்தைகள் திருட்டை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு 🏥மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பயோ மெட்ரிக்’ முறை கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்🎙. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல 🏥மருத்துவமனையில் ரூ.25 💸லட்சம் மதிப்புள்ள நுழைவாயில் மற்றும் ரூ.1.3 கோடி மதிப்பில் சிறப்பு அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று திறந்துவைத்தார்👍. இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது🎙,
"எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதற்கு முன் 837 படுக்கைகள் இருந்தது. தற்போது அங்கு கூடுதலாக 40 படுக்கைகள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் பிறந்து 28 நாட்கள் ஆன குழந்தைகளுக்கான பிறவி குறைபாடுகள் மற்றும் இதர அறுவை சிகிச்சை செய்வதற்காக சிறப்பு ஆபரேஷன் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது." என்று கூறினார்😯. மேலும், அவர் கூறுகையில், "இனி வரும் காலங்களில் குழந்தைகள் திருட்டை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 'பயோ மெட்ரிக்' முறை வசதி கொண்டுவரப்படவுள்ளது. இதன் மூலம் தாயின் விரல் ரேகை வைத்தால் மட்டுமே குழந்தைகள் இருக்கும் பெட்டியை திறக்க முடியும்" என்று தெரிவித்தார்👏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬