தமிழ் உணர்வு கொண்ட யார்வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்-கமல்ஹாசன்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

'தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டை ஆளலாம்' என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்🔈. இன்று நடந்த தனியார்📺 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கமல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்🎙. அப்போது ரஜினியின் அரசியல் கருத்துக்கள் பற்றி அவரிடம் கேட்டபோது🎙,"ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை. சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினியின் கருத்தில் தவறு ஒன்றும் இல்லை. வித்தியாசமான கருத்தும் இல்லை. அரசியல் என்பது சம்பாதிக்கும் இடம் அல்ல. அது சேவை செய்யும் இடம் என்பதை உணர்த்த வேண்டும். கடந்த 6 மாதங்களாக கொண்டாடும் வகையில் ஒரு நிகழ்ச்சி கூட இல்லை." என்று அவர் கூறினார்👍. மேலும், 'தற்போதைய அரசியல் சூழலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்றுதான் தோன்றுகிறது. காந்தி, நேரு, போஸ் என்ற பெயர் கொண்டவர்கள் எவ்வளவோ பேர் எங்கள் ஊரிலேயே இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்களா? என்னைப் பொருத்தவரை நான் என்னை இந்தியனாகவே கருதுகிறேன். இந்தியாவின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கிறேன்'. என்றும் தெரிவித்தார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬