விரைவில் 108 🚑ஆம்புலன்ஸ் சேவைக்கு 📱'மொபைல் ஆப்' வசதி👏

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

விரைவில் தமிழகத்தில் 108 சேவைக்கு🚑 என்று பிரத்யேகமான 📱'மொபைல் ஆப்' சேவை தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்🔈. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள 108 🚑தலைமை சேவை மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றியோருக்கு 📜சான்றிதழ்களை வழங்கிய விஜயபாஸ்கர் பேசுகையில்🎙,"புரட்சித் தலைவி அம்மாவின் 108 அவசர கால ஊர்தி சேவையை மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உபயோகப்படுத்தி பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், 108 சேவை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நடைபெற்ற இடத்தை தெரிவிக்கும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு பிரதியேகமாக கைப்பேசி செயலி (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இச்சேவையை முதல்-அமைச்சர் விரைவில் துவங்கி வைப்பார்." என்று தெரிவித்துள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬