சென்னையில் திடீர் கோடை மழை⛈

  |   செய்திகள்

சென்னையில் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், சென்னையில் கொளுத்தி எடுத்த வெயிலின் தாக்கம் குறைந்து, இன்று மாலை முதல் இதமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, எழும்பூர், அண்ணா சாலை, ராயப்பேட்டை, அண்ணாநகர்,சேப்பாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால், அனலில் அவதிப்பட்டு வந்த மக்கள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்😃. அதேபோல், திருவள்ளூர், மதுரை, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை⛈ பெய்து வருகிறது. கேரளாவில், நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬