ஐதராபாத் 🌊ஏரியில் செத்து கிடந்த 30,000 🐠மீன்கள்😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹைராபாத்தில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் ராம்பள்ளி ஏரியில், கிட்டத்தட்ட 30,000 மீன்கள்🐟 இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது😟. இதற்கு அதிகபட்ச்ச 🌞வெப்பம் தான் காரணம் என்று கூறப்படுகிறது😯. ஆனால் சுற்றுசூழல் ஆர்வலர்கள்🎙,"கோடை காலத்தில் ஏரியில் நீர் குறைவாக இருப்பதால் மீன்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஏரிகளைச் சுற்றி மரங்கள் வைக்காததும், ஏரிகளில் கலக்கும் வீட்டுக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், நகரக் கழிவுகள் ஆகியவற்றை தடுக்காததுமே காரணம்" என்று குற்றம்சாட்டியுள்ளனர்😳. மேலும்,ரோகு, கட்லா, பங்காரு தீகா, கோர மீன் ஆகிய மீன் 🐟வகைகள் இந்த ஏரியில் செத்து மிதந்தன😟 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬