'இசை உலகம் சிதைந்து விட்டது'-கலங்குகிறார் இளையராஜா😢

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இசை அமைப்பாளர் 🎹இளையராஜா தனது இசை குழுவினரை ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து பேசினார்😯. அப்போது அவர் பேசுகையில்🎙, 'நான் இசை அமைத்த நாற்பது வருட காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர்களுடன் பாடி, இசை அமைத்து ஒலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் நடக்கப்போவதில்லை. இன்றைக்கு இசையை அமைப்பவர்கள் இல்லை பாடுபவர்கள் இல்லை. சும்மா ஏதோ பண்ணிட்டு இருக்கோம்', என்று கூறினார்😳.
மேலும் அவர் பேசுகையில்🎙,'இந்த இசை எவ்வளவு உயர்ந்தது. எத்தனை ராகங்கள். எவ்வளவு வாத்தியகருவிகள். வாசிக்கும் விதம், எத்தனை எத்தனை பாவங்கள். எத்தனை உணர்வுகள்... எல்லாம் போய்விட்டது. திருப்பதியில் போய் மொட்டை போட்டுவிட்டு புருவத்தையும் சேர்த்து எடுத்த மாதிரி இருக்கிறது இன்றைய இசையின் நிலை. இந்தியா முழுக்க இதே நிலைதான். இசை உலகம் சிதைந்துவிட்டது' என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬