இந்திய நிறுவனங்களை குறி வைக்கும் சைபர் குற்றவாளிகள்😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இந்திய நிறுவனங்கள் பயன்படுத்தும் 💻கணினி மென்பொருளில் 60 சதவிகிதம், சைபர் அட்டாக் ஆபத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது😱. முறைகேடான வழியில் இவற்றினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதே இதற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்😯. வான்னக்ரை ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலை அடுத்து இந்திய நிறுவனங்கள் பயன்படுத்தும் மென்பொருளுக்கும் புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளது😳. சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவன மென்பொருள் பயன்பாட்டில் 60% ஒழங்கற்ற முறையில் உள்ளதால் இந்த ஆபத்து உருவாகியுள்ளது😟.
உரிமம் பெற்ற மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய ஆபத்தில் இருந்து தப்பமுடியும்👍. பொது இயங்குதளங்களை பயன்படுத்துவது சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள்👍. போலி இ-மெயில், கவர்ச்சியான விளம்பரங்கள், மனதை தொடும் காட்சிகள் இவைகள் தான் சைபர் கிரிமினல்களின தாக்குதல் யுத்தி😳. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் இந்திய நிறுவனங்கள் மீது தொடுக்கப்பட்ட சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை 50,300 ஆகும்😱. இந்நிலையில் பாதுகாப்பற்ற மென்பொருள் பயன்பாடு அதிகரித்து இருப்பதால் வருங்காலத்தில் சைபர் தாக்குதல்கள் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது😒.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬