நெல்லையில் 🐕கால்நடை மருத்துவர்கள் திடீர் போராட்டம்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நெல்லை மாவட்டத்தில் உள்ள 🐄கால்நடை மருத்துவர்கள் இன்று திடிரென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. 💸சம்பள உயர்வு, பதவி உயர்வு தொடர்பான கடந்த பிப்ரவரி வெளியிட்ட அரசாணை 49ஐ நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு🚫 தெரிவித்து இந்த போராட்டம் இன்று திருநெல்வேலியில் நடைப்பெற்று வருகின்றது😯. 25 ஆண்டுகளாக ஒரே பதவி மற்றும் ஒரே ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்து தங்கள் ஆதங்கத்தை காட்டவே இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்🔈. மேலும், 🏥105 மருத்துவமனைகளில் 85 மருத்துவர்கள் உள்ள நிலையில், இன்று யாரும் பணிக்கு செல்ல வில்லை☹. அவசர தேவைக்கு கால்நடை ஆய்வாளர்கள், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬