புதிய 💸ரூபாய் நோட்டுகள் அறிமுகம்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

'ஏ' வரிசை கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளை 🏦ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது🔈. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது👍. இந்நிலையில், 'ஏ' சீரியல் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ளது😯. எனினும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 'இ' சீரியல் கொண்ட நோட்டுகளும் பயன்பாட்டில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது🔈. மேலும், புதிதாக வெளியிடப்பட்டுள்ள 500நோட்டுகளில் 'ஏ' சீரியல் எண் இருக்கும் அதன் பின், 2017-ம் ஆண்டு என குறிப்பிடப்பட்டிருக்கும்😯. இந்த இரண்டு மாறுதல்கள் தவிர, நவம்பர் 8-ம் தேதி அச்சடிக்கபட்ட நோட்டுகள் மாதிரி தான் இந்த நோட்டுகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬