✈லண்டனில் உள்ள 🏬27மாடி கட்டிடத்தில் பயங்கர 🔥தீ விபத்து📹https://goo.gl/xGakNF

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

✈லண்டனில் 27மாடிகள் கொண்ட 🏬கட்டிடத்தில் திடிரென்று 🔥தீ பிடித்து எரிய ஆரம்பித்தது😱. மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள கிரன்பெல் டவரில் பயங்கர 🔥தீவிபத்து ஏற்பட்டது😳. 27 மாடி கட்டிடத்தில் 2வது தளத்தில் பிடித்த தீ அனைத்து தளங்களுக்கும் பரவியது. தீயை அணைக்க 40 🚒தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 👮200 வீரர்கள் தீவிரமாக போராடினார்கள்😳.கொளுந்துவிட்டு எரியும் தீயில் முதலில் 2 பேர் 🤕காயமடைந்துள்ளனர் என கூறப்பட்டிருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 120 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்😱. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது👍. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 🔥தீ அணைக்கப்பட்ட பிறகு நடந்த மீட்புப் பணிகளில் 50 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்😟. 6⃣சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலையில் தீ பிடித்ததை அடுத்து பலர் தப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது😯. பலர் மாடிகளில் இருந்து கிடைத்தபொருட்களை வைத்து பாராச்சூட் போல் செய்து குதித்துள்ளனர்😳. சிலர் ஜன்னல் வழியாகவும் குதித்து தப்பியதாக கூறப்படுகிறது😯. எனினும் 👮போலீசார் இதுகுறித்து கூறுகையில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்று கூறினர்😱. மேலும், அந்த கட்டிடம் எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழ கூடும் என்பதால் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்களை போலீசார் வெளியேற செய்துள்ளார்கள்😳. தீ எப்படி பிடித்தது என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து விரைவில் 👮போலீசார் கண்டறிவார்கள் என்று லண்டன் மேயர் சாதிக் கான் கூறினார்🎙 என்பது குறிப்பிடத்தக்கது.
📹https://goo.gl/xGakNF

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬