சீனா நிலச்சரிவில் சிக்கிய 141 பேர் மாயம்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சீனாவில் சிச்சுவான் மாகாணத்திற்கு அருகே உள்ள சின்மோ கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 141 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன🔈. இது குறித்த செய்தி குறிப்புகள் கூறுவது என்னவென்றால்🎙, 'மலைப் பிரதேச பகுதியான மக்ஸியன் கவுண்டியிலுள்ள சின்மோ கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியிலிருந்த 46 வீடுகளும் மண்ணில் புதைந்தன. இதில் அதிலிருந்த 141 பேரும் மாயமாகியுள்ளனர். மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது' என்று கூறுகிறது😳, மேலும், மீட்பு பணியினை தீவிர படுத்த கோரி அந்நாட்டு பிரதமர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬