தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தெலுங்கானா, எக்கரெட்டிக்குடா கிராமத்தில் 14 மாத 👧பெண் குழந்தை விளையாடி கொண்டிருக்கையில் 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது😱. குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த அக்கா இதை கண்டதும் அலறிஅடித்துக் கொண்டு பெற்றோரிடம் தெரிவித்தார்😱. பின்னர் மீட்புக் குழுவினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் கூறுகையில்🎙 "குழந்தையை காப்பாற்ற கிணற்றுக்கு அருகே ஒரு குழி தோண்டப்பட்டு உள்ளது, ஆனால் கடினமான பாறைகள் உள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்🔈. மேலும், மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக கிணற்றுக்குள் ஆக்சிஜன் அளிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் குழந்தையின் நடவடிக்கையை கண்காணிக்க சிறிய 📹கேமரா பொருத்தப்பட்டுள்ளது என 👮போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்🔈. மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬