🎼பாடல் மற்றும் 👊சண்டை காட்சிகள் இல்லாத ஓர் படம்😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் படம் 🎥'X வீடியோஸ்'. இந்த படத்தை இயக்குநர் 🎬ஹரி மற்றும் பிரகாஷ்ராஜிடம் உதவியாளராக பணியாற்றிய 🎬சஜோசுந்தர் இயக்க உள்ளார். படத்தில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர்😯. இது குறித்து இயக்குநர் சஜோசுந்தர் கூறுகையில்🔈, 'ஆபாச இணையதளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்பையும், சமூக சிக்கல்களையும் பற்றி விளக்கும் படமாக இருக்கும்' என்று தெரிவித்தார்🔈. மேலும், அவர் கூறுகையில்🎙,
"இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம். படத்தின் தலைப்பைக் கண்டு தவறாக கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்." என்று கூறினார்👍. இதனை அடுத்து, இந்த படத்தில் 🎼பாடல் மற்றும் 👊சண்டை காட்சிகள் ஏதும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬