ஐ.ஏ.எஸ். 👮அதிகாரிகள் 39 பேர் மீது 💸ஊழல் குற்றச்சாட்டு😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள ஐ.ஏ.எஸ்.👮அதிகாரிகள் 39 பேர் மீது விசாரணை நடந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது👍. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால் பணிநீக்கம் உள்ளிட்ட கடும் தண்டனைகள் வழங்கப்படும் என மத்திய பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது🔈. ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்👮 39 பேர் தவிர டெல்லி மத்திய அரசு செயலகங்களில் பணியாற்றும் உயரதிகாரிகள் 29 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது👍.
அத்துடன் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் மத்திய அரசு 👮அதிகாரிகள் 68 பேர் மீது துறைரீதியான விசாரணை துவங்கியுள்ளது🙂. மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செயல்திறன் குறித்து பணிக்காலத்தில் இருமுறை ஆய்வு செய்யப்படுகிறது😯.
இதில் தோல்வியடைபவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது😟. இந்த வகையில் கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.👮 அதிகாரிகள் உட்பட 129 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 67,000 ஊழியர்களின் பணித்திறன் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இவர்களில் 25,000 பேர் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.,ஐ.ஆர்.எஸ்.👮 மற்றும் குரூப் ஏ பிரிவை சேர்ந்தவர்கள் என பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது🔈

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬