சென்னை ✈வருகிறார் பா.ஜ.க., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், ஜூலை 1-ம் தேதி ✈சென்னை வந்து தனக்கு ஆதரவு திரட்ட உள்ளார்👍. புதிய ஜனாதிபதியை 🗳தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது😯. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார்👏.இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு ராம்நாத் கோவிந்த் கேட்டு வருகிறார்🙂. அந்த வகையில், அவர் சென்னைக்கு வரும் 1-ம் தேதி ராம் நாத் கோவிந்த் வர உள்ளார்😯. அப்போது தமிழகத்தில் உள்ள ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்🤗. சென்னையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டிய பின்னர், அங்கிருந்து புதுச்சேரி மற்றும் கேரளா செல்ல ராம்நாத் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரியில் முதல்வர் 💺நாராயணசாமியை ராம்நாத் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬