சிலை கடத்தல் வழக்கில் 👮போலீஸ் கைது⛓

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

ஐம்பொன் சிலை கடத்தல் வழக்கில், சென்னை கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷன், எஸ்.ஐ., சிவகாசியில் ⛓கைது செய்யப்பட்டுள்ளார்😳. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் விவசாய நிலத்தில், 2008ல் பார்வதி, சிவன் உட்பட, மூன்று ஐம்பொன் சிலைகள் கிடைத்தன👍. அப்போது சிலை திருட்டு தடுப்பு பிரிவில், பணி செய்த சுப்புராஜ், 54, அச்சிலைகள் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக தெரிகிறது😱. இத்தகவல் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் மூலம், சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது😯. தற்போது, சென்னை கோயம்பேடு ஸ்டேஷனில், 👮எஸ்.ஐ.,யாக பணியாற்றும் சுப்புராஜை சிவகாசி அழைத்து வந்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு 👮போலீசார் விசாரித்தனர். இதனை அடுத்து அவரை ⛓கைது செய்து சிவகாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்😳. அதன் பின் அவர் தற்போது விருதுநகர் ⛓சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬