தடை🚫 செய்யப்பட்ட 'குட்கா' விற்பனை-💸லஞ்சம் வாங்கி சிக்கிய அமைச்சர்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழகத்தில் தடை🚫 செய்யப்பட்ட ‘குட்கா’ போதைப்பொருளை விற்பனைக்கு அனுமதிக்க சுகாதாரத்துறை அமைச்சர், 2 டிஜிபிக்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள்👮, மாநகராட்சி, உணவுத்துறை, மத்திய கலால் துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்த ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன😱. அதன்படி, இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாதா மாதம் 💸ரூ.14 லட்சம் ருபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆவணங்களில் குறிப்பிட்ட காலகட்டத்தில் சென்னை நகர போலீஸ் 👮கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் ரூ.1.4கோடியும், ஜார்ஜ் ரூ.75 லட்சமும் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது😳.

இந்த குட்கா நிறுவனத்தில் லஞ்சம் வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் 2 டிஜிபி மற்றும் அதிகாரிகள் உட்பட மற்ற துறை 👮அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி 💸வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்✍. ஆனால் கடந்த 6 மாதமாக தமிழக அரசு அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை😳. இதனால் வருமான வரித்துறையே குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதா❓அல்லது இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோருவதா❓என்று தற்போது தீவிரமாக 🤔ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது😳.

இதுபற்றி இன்று நடந்த சட்டசபையில் விவாதம் செய்ய அனுமதி அளிக்கப்படாத காரணத்தினால் திமுக.வினர் வெளிநடப்பு செய்தனர்😳. 'செய்தித்தாள்களில் வரும் செய்திகளை சட்டசபையில் பேச அனுமதிக்க இயலாது. மேலும், இதற்கான உரிய ஆவணங்கள் இருந்தால் பேசலாம்'என்று சபாநாயகர் கூறியதை அடுத்து வெளிநடப்பு செய்த திமுக.வினர், 'தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற முழக்கத்தை எழுப்பி🔈 சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள்😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬