திருப்பதி தேவஸ்தானத்தில் 24மணி நேர மருத்துவ வசதி👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரும் பக்தர்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தி தர தேவஸ்தான 👮அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்👍. திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், வைகுண்டம் க்யூ காம்பிளக்ஸில் காத்திருந்து பிறகு சுவாமியை தரிசிக்கின்றனர்😯. இதனால் இங்கு பால், டீ, சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது😌. ஆனால் முதியோருக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது😳. ஆதலால், தீடீர் உடல்நலக்குறைவு ஏற்படுபவர்களுக்கு 24 மணி நேர மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு உத்தரவிட்டுள்ளார்👌. மேலும் வைகுண்டம் காம்பிளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக 📞தொலைபேசி வசதியும் விரைவில் செய்து தரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬